மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் 102-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தொண்டர்களுக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 102-வது பிறந்த நாள் உலகமெங்கும் உள்ள தமிழ் சமூகத்தால் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ் மக்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம், அ.தி.மு.க. மட்டும்தான் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றும், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் புரட்சித் தலைவரின் புனிதப் பாதையில், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வகுத்துத் தந்த வெற்றிப்பாதையில் எந்தத் தேர்தல் எப்போது வந்தாலும், விசுவாசத் தொண்டர்களாகிய நாம் வெற்றி வாகை சூட அயராது உழைத்து ஒற்றுமையோடு புரட்சித் தலைவரின் பிறந்த நாளில் சபதம் எடுக்க, அழைப்பு விடுத்துள்ளனர்.