மேட்டூர் அணை நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக குறைவு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையளவு குறைந்ததையொட்டி, கடந்த சில தினங்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதனால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 23 ஆயிரத்து 501 கனஅடியில் இருந்து, 20 ஆயிரத்து 495 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.04 அடியாக உள்ளது. நீர் இருப்பு 93.53 டிஎம்சியாக உள்ளது. டெல்டா மாவட்ட கால்வாய் பாசனத்திற்காக 26 ஆயிரத்து 71 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 21 ஆயிரம் கனஅடியில் இருந்து, 17 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்தும் குறைந்துள்ளது. இருப்பினும் ஒகேனக்கல் அருவியில் பயணிகள் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் தொடர்ந்து 25 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிபடியாக குறைந்துள்ளதால், மேட்டூர் அணையின் 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நேற்று முதல் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version