தமிழகத்தில் தொடர் கனமழையால் 14 அணைகள் முழு கொள்ளளவை எட்டியது

வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால், தமிழகத்தில் 14 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிகையால், தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 89 அணைகளில் 14 அணைகள் தன்னுடைய முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணை, வரட்டுப்பள்ளம் அணை, பவானிசாகர் அணை, சோத்துப்பாறை அணை, மாம்பழத்துறையாறு அணை உட்பட 14 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மீதமுள்ள அணைகளில் பெரும்பாலானவை 90 சதவீதத்தை எட்டியுள்ளது. விரைவில் அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version