சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், நடப்பாண்டில் இரண்டாவது முறையாக 100 அடியை எட்டியுள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து, இன்றைய நிலவரப்படி 27,212 கன அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் அணையின் நீர் இருப்பு 64.71 டி.எம்.சி.யாக காணப்படுகிறது.
அணையில் இருந்து டெல்டா பாசனத் தேவைக்காக, வினாடிக்கு 14,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல், கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர் மட்டம், நடப்பாண்டில் இரண்டாவது முறையாக 100 அடியை எட்டியுள்ளதால், விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.