நாட்டு மக்கள் ஊரடங்கு உத்தரவை தாமாகவே அமல்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், நாளைய தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நாளை நடைபெறும் மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுய ஊரடங்கை அனைவரும் பின்பற்றும் வகையில் மார்ச் 22 அன்று மின்சார ரயில்கள் குறைவாக மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 10 மணி வரை பயணிகள் ரயில் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஞாயிறன்று அதிகாலை 4 மணி முதல் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.