மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக, கடந்த மே மாதம் 10ம் தேதி நிறுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை, கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 6ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவை காலை 5:30 மணி முதல் இரவு 11 மணிவரை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version