வங்கக் கடலில் இருந்தும், அரபிக் கடலில் இருந்தும் வரக்கூடிய காற்று ஒன்றோடு ஒன்று சங்கமிக்கும் காரணத்தால் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும், வட தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.