பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இன்று முதல் முடி காணிக்கைக்கு வசூலிக்கப்படும் கட்டணம் ரத்து என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, முடி காணிக்கை பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
தமிழக கோயில்களில் முடி காணிக்கைக்கு வசூலிக்கப்படும் கட்டணம் ரத்து செய்யப்படும் என்றும், முடி காணிக்கை பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு திருக்கோயில் சார்பில் ஊதியம் வழங்கப்படும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பழனி கோயிலில் முடி காணிக்கை பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயில் நிர்வாகம் சார்பாக ஊதிய தொடர்பான எந்த அறிவிப்பும் வரவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். ஊதியம் அறிவிக்கும் வரை முடி காணிக்கைக்கு 25 ரூபாய் கோயில் சார்பில் வழங்கப்படும் என்பதை ஏற்க மறுத்துள்ள அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் தங்களது போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளதால், பழனி கோயிலில் இலவச முடி காணிக்கை செலுத்தும் திட்டம் அமுல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Discussion about this post