சட்டிஷ்கர் மாநிலத்தில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், 20 ஆண்டுகளுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சட்டிஷ்கர் மாநிலம் கோகடி கிராமத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட கௌசரண், 20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். பெரம்பலூரில் உள்ள வேலா கருணை இல்லத்தில் இருந்த கெளசரண் குறித்த தகவல், மாவட்ட ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் விஜயலட்சுமி மூலம், மாநில குற்ற ஆவண காப்பாகத்துக்கு கிடைத்துள்ளது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கௌசரண் காணாமல் போனது குறித்து சட்டிஷ்கர் மாநிலம் கோட்டா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அங்குள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்ட மாநில குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் தாஹிரா, கௌசரண் உறவினர்களான அஜுராம், ராம்குமார் ஆகியோரை சென்னை வரவழைத்து, மனநலம் பாதிக்கப்பட்ட கௌசரணை ஒப்படைத்துள்ளார்.