மேகாலயாவில் செயல்பட்ட சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 15 தொழிலாளர்களில் ஒருவரின் உடல் 32 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.
மேகாலயாவின் ஈஸ்ட் ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சைபுங் என்ற பகுதியில் கடந்த டிசம்பர் 13-ம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் தடை செய்யப்பட்ட எலிப் பொந்து என அழைக்கப்படும் சுரங்கத்துக்குள் 15 தொழிலாளர்கள் நிலக்கரி எடுக்கச் சென்றனர். அவர்கள் திரும்பும் முன்பு தொடர் மழையால் அருகிலிருந்த நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுரங்கத்திற்குள் நீர் புகுந்தது. இதனால் அவர்களை மீட்க முடியாமல் மீட்புப் படையினர் கடந்த ஒரு மாதமாக திணறி வந்தனர்.
இந்நிலையில் 32 நாட்களுக்கு பிறகு சுரங்கத்தில் இருந்து ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 200 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டது. எஞ்சியுள்ள 14 பேரும் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
Discussion about this post