மேகதாது விவகாரம்..! உண்மைப் போராளி யார்? கபட நாடகதாரி யார்?

தமிழகத்தில் எப்போதெல்லாம் காவிரி விவகாரம் வருகிறதோ அப்போதெல்லாம் பதற்றத்தின் உச்சிக்கே சென்றுவிடுகிறது திமுக… ஏன் இந்தப் பதற்றம்? காவிரி விவகாரத்தில் உண்மைப் போராளி யார்? வரலாற்றின் பக்கங்களை புரட்டலாம் வாருங்கள்..

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிசாமி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஒருபுறமும், கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு பயந்து இன்னொரு புறமும், திரிசங்கு சொர்க்கத்தில் தவித்துக்கொண்டிருக்கிறது விடியா திமுக அரசு… மேகதாது விவகாரம் வந்தாலே திமுக பதறுவதும் கதறுவதும் ஏன்? ரத்தக்கொதிப்படைவது எதனால்? இந்தக் கேள்விகளுக்கு வரலாறு விடைசொல்லும்…

காவிரியில் தமிழகத்திற்கு இருக்கும் உரிமைகளை மீட்க புரட்சித்தலைவர் காலம் தொட்டே அதாவது 1986ம் ஆண்டிலிருந்தே அதிமுக உறுதியோடு போராடிக் கொண்டிருக்கிறது என்பதை இந்த தமிழகம் நன்கு அறியும். இதைத்தான் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி எல்லா மேடைகளிலும் புள்ளிவிபரங்களோடு புட்டு புட்டு வைக்கிறார். இதன் காரணமாகத்தான் எங்கே தங்கள் குட்டு வெளியாகிவிடுமோ என்ற எண்ணத்தில் பதறுகிறது திமுக…

இந்த பதற்றத்திற்கு முக்கியக் காரணமே காவிரி நடுவர் மன்றத்தை அமைத்ததில் இருந்து நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை 2013ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீறிய முயற்சியால் மத்திய அரதசிதழில் அச்சிடச் செய்ததுவரை அதிமுக முன்னெடுத்த போராட்டங்கள் வெளிவந்தால் எங்கே தங்கள் சாயம் வெளுத்துவிடுமோ என்று திமுக திணறுவது நியாயம்தானே…

மேகதாதுவில் அணை கட்ட தற்போதைய கர்நாடக அரசு அதிதீவிர முயற்சிகளை மேற்கொள்ளுகையில், அதனை எதிர்க்க திராணியில்லாமல் மத்திய நீர்வள அமைச்சரை சந்தித்து கடிதம்கொடுக்கிறது இந்த முதுகெலும்பில்லாத திமுக அரசு… 2009 ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை பத்தாண்டு காலமாக மத்திய அரசில் அங்கம் வகித்த, திமுக காவிரிப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர துரும்பைக் கூட கிள்ளிப்போடாதது ஏன்? காங்கிரஸ், பாஜக என்று மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, தன் தமையனுக்கு மத்திய அரசு பதவி வேண்டி தூது அனுப்பிய திமுக, காவிரிக்கு கதவைக்கூட தட்டாதது ஏன்? கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பதவியேற்பு விழாவிற்கு பவுசாகச் செல்லும் முதல்வர், காவிரி நீர் கேட்டு செல்லாதது ஏன்? என்ற கேள்விகளை சரமாரியாகக் தொடுத்தால் திமுக வெலவெலத்துப்போவது நியாயம்தானே….

காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை காப்பாற்றிக் கொடுத்ததற்காகத்தானே காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து – பொன்னியின் செல்வி என்ற பட்டத்தை மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவிற்கு அளித்தார்கள்… இந்த கதையெல்லாம் தூசி தட்டி தமிழக மக்களுக்கு ஞாபகம் வந்துவிட்டால் என்ன செய்வது என்று திமுக பதறுவதுநியாயம் தானே…..

கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டமன்றத்தில் திமுக அரசு கொண்டுவந்த தனிநபர் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது அதிமுக… திமுக கொண்டு வந்த தீர்மானம் என்றாலும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், காவிரி விவகாரத்தில் என்றென்றும் மக்கள் பக்கம் தான் அதிமுக என்பதற்கு சான்றாக தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்த காவிரிப் பிரச்சனையில் உண்மையான போராளி தாங்கள் தான் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துக்காட்டியது அதிமுகதான்…

காலங்கடந்து கதவைத்தட்டினாலும் பரவாயில்லை… காவிரிக்காக ஒன்றிணைந்து போராட நாங்கள் தயார் .. எங்களோடு வாருங்கள் என்று ஆளுங்கட்சியையே கைபிடித்துக் கூட்டிச்செல்கிறது அதிமுக… ஏனெனில் அதிமுக மக்களுக்கான இயக்கம்… மக்களுக்கான தலைமையைக் கொண்ட ஓர் இயக்கம்..

–  மனோஜ்குமார் கோபாலன்,  இணையாசிரியர்

Exit mobile version