மக்களவை தேர்தலையொட்டி விவசாயிகளை கவரும் வகையில் மெகா திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய பா.ஜ.க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் பா.ஜ.க ஆட்சியை பறிகொடுத்தது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது விவசாய கடன் தள்ளுபடியை காங்கிரஸ் கட்சி பிரதானமாக முன்வைத்தது தான் வெற்றிக்கு காரணம் என கூறப்படுகிறது. இதேபோன்று மக்களவை தேர்தலிலும் விவசாய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஈடுகொடுத்து விவசாயிகளை கவரும் விதமாக மெகா திட்டம் ஒன்றை தேர்தலுக்கு முன்பாக செயல்படுத்த மத்திய பா.ஜ.க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் அந்த திட்டம் நேரடி கடன் தள்ளுபடியாக இருக்க வாய்ப்பு இல்லை என்றும், மாறாக மானியம் மற்றும் பயிர்களுக்கான அடிப்படை விலையை உறுதி செய்யும் வகையில் இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post