மேகதாது அணை; காங்கிரஸுக்கு எதிர்ப்பு காட்டுமா திமுக? டெல்டாக்காரன் ஸ்டாலின் விழித்துக்கொள்வாரா?

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக காங்கிரஸ் அரசு தீவிரம் காட்டி வருகிறது. காவிரியின் குறுக்கே கட்டப்படும் அந்த அணையால், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் நிலவிவதால், விவசாயிகள் இப்போதே தங்களின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கி உள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது, கர்நாடகாவில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்துக்கு அதிமுக தரப்பில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியதால், அணை கட்டும் முயற்சிகள் தடுக்கப்பட்டது. ஆனால் தற்போது கர்நாடகாவில் ஆட்சி அமைத்த காங்கிரஸ், அணை கட்டுமானத்தை தீவிரப்படுத்தி உள்ளது.

தங்களது கூட்டணி கட்சியான காங்கிரஸுடன் பேச்சு வார்த்தை நடத்தி தமிழக விவசாயிகளையும், டெல்டா மாவட்டங்களையும் விடியா அரசு பாதுகாக்குமா?

நானும் டெல்டா மாவட்டத்துக்காரன் என்று வீண் பெருமை பேசிய ஸ்டாலின், மேகதாது அணையை தடுப்பதில் தீவிரம் காட்டுவரா? அல்லது நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியில் இருந்து காங்கிரஸை கழட்டிவிட்டு பாடம் கற்பிப்பாரா என்று பொதுமக்கள் பேசிவருகிறார்கள்.

Exit mobile version