சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட மாரத்தான் போட்டியை தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் இரண்டாவது பெரிய மாரத்தான் என்று ஓடுகள வீரர்களால் வர்ணிக்கப்படும் சென்னை மாரத்தான் போட்டி அதிகாலை தொடங்கியது. மெட்ரோ ரயில் நிறுவனமும், சென்னை ரன்னர்ஸ் அமைப்பினரும் இணைந்து நடத்திய இந்த மாரத்தான் போட்டியை, அமைச்சர் எம்.சி. சம்பத், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில், 4 பிரிவுகளில் மாரத்தான் ஒட்டங்கள் நடைபெற்றது. 10 கிலோ மீட்டர் பிரிவில், வீல் சேர் பயன்படுத்தி 100க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளும் கலந்து கொண்டனர். மேலும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். இந்த பிரம்மாண்ட மாரத்தான் போட்டியில் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.