மருத்துவக் கல்லூரிகளில் தொடரும் பாலியல் குற்றங்கள்! விடியா திமுக அரசு என்ன செய்கிறது?

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி செயல்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு இணைந்துள்ளது இதுகுறித்து செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் தொடரும் பாலியல் குற்றங்கள்!

தமிழகம் முழுவதும் அரசின் சார்பில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளும் இரண்டு பல் மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. இதில் 5000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் படித்து வருகிறார்கள். மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் முதல் மாணவிகள் வரை பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும்போது அதுதொடர்பான  குற்றங்களை விசாரிக்க விசாகா கமிட்டி என்ற கமிட்டி செயல்பட்டு வருகிறது.

ஆனால் சமீப காலங்களாக அந்த விசாகா கமிட்டி என்ற குழு முறையாக அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் செயல்படவில்லை. அதனால் தான் தமிழகம் முழுதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவிகளுக்கும் பெண் ஊழியர்களுக்கும் பாலியல் தொந்தரவு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சென்னையை அடுத்த செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவி பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டார். அதேபோல், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பாலியல் தொந்தரவால் மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில் மாணவ மாணவிகள் அனைவரும் ஒன்றிணைந்து போராடக்கூடிய நிலை ஏற்பட்டது.

இது போன்ற பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி விசாகா கமிட்டி என்ற கமிட்டி ஒவ்வொரு அரசு அலுவலகங்களில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. குறிப்பாக அந்த கமிட்டியில் உள்ள உறுப்பினர்கள் அவருடைய பெயர் தொலைபேசி எண் உள்ளிட்ட பெயர் பலகையை மக்கள் அதிகம் கூடும் இடத்தில் அந்த பெயர் பலகை வைக்க வேண்டும். ஆனால், சமீப காலங்களாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விசாகா கமிட்டி என்ற பெயர்பலகை இல்லாத நிலை தான் ஏற்படுகிறது.

விசாகா கமிட்டி என்ன செய்துகொண்டிருக்கிறது?

குறிப்பாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மாணவிகள் புகார் கொடுக்க வரும் போது சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வரே நேரடியாக சென்று மாணவிகளை மிரட்டவும் புகார் கொடுக்க விடாமல் தடுப்பதும் வாடிக்கையாக்கி உள்ளது. அதனை மீறி புகார் கொடுக்கும் மாணவிகளை தொடர்ந்து படிக்க முடியாத வகையில் தேர்வில் அவர்களுக்கு செய்முறை தேர்வு மதிப்பெண்கள் குறைக்கப்படுகிறது. அதேபோல, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவிகள் தொடர்ந்து அந்த கல்லூரியில் படிக்க முடியாத வகையில் மிரட்டப்படுகிறார்கள். பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் எடுப்பதில்லை. குறிப்பாக சம்பந்தப்பட்ட குற்றச்செயல் புரிந்த ஊழியர்கள் மருத்துவர்கள் பணியிடமாறுதல் மட்டுமே செய்யப்படுகின்றனர். இதனால் பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட இடத்திலேயேயும் இதுபோல பாலியல் குற்றங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான சட்டரீதியான நடவடிக்கைகள் எங்கும் எடுக்கப்படுவதில்லை.

தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் படிக்கும் மாணவிகள் மருத்துவக் கல்லூரி விடுதியிலேயே தங்கி இருந்து படிக்கக்கூடிய நிலையில் தான் இருந்து வருகிறார்கள். ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு தங்கி இருந்து படிக்கக்கூடிய மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிக்கிறது. பெண்களுக்கான பாதுகாப்பான அரசு என மார்த்தட்டிக் கொள்ளும் திமுக அரசு மருத்துவமனைகளிலேயே பாலியல் துன்புறுத்தல் குற்றங்கள் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் முறையாக விசாகா கமிட்டியை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முறையாக துவக்கி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே மாணவ மாணவிகளின் கோரிக்கையாக உள்ளது. நடவடிக்கை எடுக்குமா விடியா திமுக அரசு என்று அரசியல் விமர்சகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Exit mobile version