இன்று முதல் வருகிற 22ம் தேதி வரை, சென்னையிலுள்ள பத்து மண்டலங்களில் மாற்று திறனுடைய மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீடு முகாமானது நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் 1 முதல் 18 வயது வரை உள்ள மாற்று திறன் உடைய மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சிஐடி நகரில் உள்ள தொடக்க பள்ளியில், மருத்துவ முகாமினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ராஜேந்திரன் தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதவி திட்ட இயக்குனர், முகாமில் பங்கேற்கும் குழந்தைகளை மருத்துவ பரிசோதனைக்கு பின், பல்வேறு சலுகைகளை பெற்று தர அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.