பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிடக்கூடாது என, ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி. லோகுர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சமூகத்தில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டோர் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுவது துரதிருஷ்டவசமானது என அவர் வருத்தம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பாலியல் துண்புருத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் மற்றும் அடையாளங்களை ஊடகங்களோ அல்லது பத்திரிக்கைகளோ வெளியிடக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பான வழக்குகளை பதிவு செய்யும்போது, சிறுவர்கள் உள்பட குற்றவாளிகளின் பெயர்களை போலீசார் வெளிப்படையாக பதிவிடக்கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.