பெட்ரோல் விலையை போல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மீ டூ புகார்கள்

பொதுவாக, யாராவது நம்மிடம் அன்பை தெரிவிக்கும் போது, நாம், மீ டூ என்று பதிலளிப்போம். ஆனால், தற்போது மீ டூ என்ற சொல், மிரட்டும் சொல்லாக மாறிவிட்டது.

ஆம், பெண்கள், அதிலும் குறிப்பாக நடிகைகள், தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை தெரிவிப்பதற்கான மிரட்டும் சொல்லாக இந்த மீ டூ இருக்கிறது. இந்த கணக்கை துவக்கி வைத்து, திரையுலக ஆண்களுக்கு சிம்ம சொப்பனத்தை கொடுத்தவர், பாடகி சின்மயி.

கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறிய அந்த நிமிடத்திலிருந்து, அந்த செய்தி நாளுக்கு நாள் பல கோணங்களில் சென்று கொண்டிருக்கிறது. சின்மயிக்கு ஆதரவாக, சமந்தா, வரலட்சுமி, நடிகர் சித்தார்த் உள்ளிட்ட பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிகழ்வை கண்ட வேறு சில நடிகைகளும், அவர்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியே சொல்ல ஆரம்பித்துள்ளனர். அந்த பட்டியலில் அடுத்து இணைந்தவர் நடிகை ராணி.

இவர், தன்னுடன் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்கும் ஷண்முகராஜனும், அந்த தொடரின் இயக்குர் ராஜ்கபூரும் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக காவல் துறையிடம் புகார் அளித்தார். அந்த பிரச்சனையும் பல கோணங்களை சந்தித்து, நடிகர் மன்னிப்பு கோரி பின் நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, லேட்டஸ்ட்டாக அந்த பட்டியலில் இணைந்த ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை, இயக்குனர் சுசி கணேசன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இப்படியே, ஒவ்வொரு நாளும் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அடுத்த நாள் விடிந்தால், யார் பெயர் வெளியில் வரும் என்ற கலக்கத்திலேயே, திரையுலக ஆண்மகன்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Exit mobile version