தமிழகத்தைப் பொறுத்தவரை பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மேற்படிப்புகளுக்காக மாணவர்கள் கல்லூரிகளை நாட தொடங்கிவிட்டனர். அதன் பொருட்டு பொறியியல் கலந்தாய்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதன் காலக்கெடுவினை இன்னும் இரண்டு நாட்கள் நீட்டித்து உத்தரவு இட்டுள்ளது மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம்.
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன…!
எம்பிபிஎஸ், பி டி எஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மேலும் 2 நாள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதாவது தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவர் கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம் பி பி எஸ், பி டி எஸ் இடங்களுக்கு கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி காலை 10 மணி முதல் இன்று ( 10.07.2023) மாலை 5 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி மருத்துவப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆர்மிகுதியில் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மேலும் இரண்டு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 21 ஆயிரத்து 560 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 9,400 பேர் என்ன மொத்தம் 31 ஆயிரம் மாணவ மாணவிகள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பித்திருந்தனர். இன்று மாலை 5 மணி உடன் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாக இருந்த நிலையில், மேலும் இரண்டு நாள் நீடிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தரவரிசை பட்டியல் உடனடியாக வெளியிடப்பட்டு இன்னும் சில தினங்களில் கலந்தாய்வு தொடங்க மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் திட்டமிட்டுள்ளது.
நீட் இல்லாத சில மருத்துவப் படிப்புகள்…!
இந்த விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்கும் முன்பு நீட் தேர்வை ஒழிப்பதே எங்கள் இலட்சியம் என்று சவால் விட்டது. ஆனால் அதற்கான எந்த ஆயத்த நடவடிக்கையினையும் அரசு எடுக்கவில்லை. இதில் விளையாட்டுத் துறை அமைச்சரான வாரிசு அமைச்சர் நீட் தேர்வினை ஒழிக்கும் ரகசியம் தனக்குத் தெரியும் என்று ஒரு பொய்ப்பிரச்சாரத்தினை கிளப்பிவிட்டார். நிலை இப்படி இருக்கு, நீட்த் தேர்வு தமிழகத்தில் நடந்து முடிந்தே விட்டது. நீட்த் தேர்வினால் பல மாணவர்களின் மருத்துவக் கனவானது காணாமல் போகும் நிலை மேல் எழுந்துவிட்டது. தற்போது இந்த நீட் இல்லாத சில மருத்துவப் படிப்புகளை நாம் இங்கு காணலாம்.
பிஎஸ்சி நர்சிங். பிஎஸ்சி பயோடெக்னாலஜி, பிஎஸ்சி உளவியல், பிஎஸ்சி கார்டியாகுலார் டெக்னாலஜி, இளங்கலை பயோமெடிக்கல் இன்சினியரிங் , பி பார்ம், பிஎன்ஒய்எஸ், பிஎஸ்சி உணவுத் தொழில்நுட்பம், பிஎஸ்சி வேளாண் அறிவியல், பிஎஸ்சி உயிரியல் என்று சிலப் படிப்புகள் உண்டு. வாய்ப்பு இழந்த மாணவர்கள் இதன் மூலமாக தங்களது மருத்துவத்துறைக்கான சேவையினைத் தொடரலாம்.