மாயாவதி, முலாயம்சிங் சந்தர்ப்பவாத கூட்டணி: அரசியல் விமர்சகர்கள் கருத்து

உத்தரபிரதேசத்தில் போட்டிபோட்டிக் கொண்டிருந்த பகுஜன் சமாஜ்வாதி மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இணைந்து கூட்டாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பது சந்தர்ப்பவாத கூட்டணியாக என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து உள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சிகள் இரண்டும் எதிர்கட்சிகளாக செயல்பட்டு வந்தன. இந்தக் கட்சிகளின் தலைவர்கள் மாயாவதி மற்றும் முலாயம்சிங் யாதவ் உள்ளிட்டவர்கள் ஒருவருக்கொருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், ஆளும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக இரு கட்சிகளும் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை எதிர்கொண்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் இந்த இரு கட்சிகளின் தொண்டர்களும் ஒருவருக்கொருவரை எவ்வாறு எதிர்கொள்வது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் மெயின்புரியில் இன்று நடைபெறவுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக இணைந்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர். இதையொட்டி முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், மாயாவதி உள்ளிட்டோர் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

Exit mobile version