அமெரிக்காவின் டென்சி நகரத்தில் ஷாட் மோரிஷ் என்பவர் வசித்து வருகிறார். சிஎம்ஓ பார்பர்ஷாப் ஓனரான அவர் சொந்தமாக கார் வைத்துள்ளார்.
சமீபத்தில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சில படங்களை பகிர்ந்தார். அதில் சில கரடிக்குட்டிகள் அவரது காரினுள் ஏறிக்கொண்டு ஜாலியாக விளையாடிக் கொண்டு இருந்ததாகவும், அதன் அம்மா வெளியே நின்று அதனை வேடிக்கைப் பார்த்ததாகவும் கூறியுள்ளார். மேலும் திடீரென இதனை கண்ட அவர் அதிர்ச்சிக்குள்ளானதாகவும் பதிவிட்டுள்ளார்.
நாமும் அந்த படங்களை பார்க்கும் போது குழந்தைகள் காருக்குள் ஏறி சேட்டைகள் செய்யும் காட்சிகள் தான் நினைவுக்கு வருகின்றன. இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Discussion about this post