தமிழகம் முழுவதும் மாட்டு பொங்கல் பண்டிகை இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
தைத்திங்கள் இரண்டாம் நாளான இன்று தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், தங்களின் இல்லங்களில் உழவுக்கும் வாழ்வுக்கும் உதவிய கால்நடைகளை அலங்கரித்து, அவற்றிற்குமுன் கரும்புடன் கூடிய பொங்கல் வைத்து, படையலிட்டு தங்கள் நன்றியை தெரிவிப்பர்.
மேலும் பொங்கல், பழம், கரும்பு போன்றவற்றை கால்நடைகளுக்கு உணவாக கொடுப்பது வழக்கம். இத்திருநாளையொட்டி, கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம், எருதுவிடும் போட்டி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய வீரவிளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.