மதுரை மாவட்டம் மேலூர் அருகே வீடு புகுந்து கத்தி முனையில், 75 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலூரை அடுத்த சத்தியபுரத்தை சேர்ந்த கோபி, வெளிநாடு சென்று திரும்பிய நிலையில், தற்போது விவசாய பணி செய்து வருகிறார். இந்த நிலையில் நள்ளிரவில் இவரது வீட்டிற்குள் புகுந்த 4 பேர் கொண்ட முகமூடி கொள்ளை கும்பல்,
கத்தி முனையில் மிரட்டி தாலி செயின் உள்ளிட்ட 75 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றனர்.
இதையடுத்து வீட்டிற்குள் பூட்டப்பட்டிருந்த குடும்பத்தினரை அக்கம்பக்கத்தினர் மீட்ட நிலையில், இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post