பணத்திற்காக 10 வயது சிறுமிக்கு 40 வயதானவருடன் திருமணம்..

பணத்திற்காக ஆசைப்பட்டு தனது 10 வயது மகளை 40 வயதான ஒருவருக்கு திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட கொடூர தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.முகமது சோமர் என்பவர் பாகிஸ்தான் ஷிகார்பூர் பகுதியில் வசித்து வருகிறார்.தரகர் மூலம் திருமணத்திற்கு பெண் தேடியுள்ளார்.அப்போது தனது 10 வயது மகளுக்கு 17 வயது ஆகிவிட்டதாக கூறிய சிறுமியின் தந்தை 40 வயதான முகமது சோமருக்கு திருமணம் செய்து வைப்பதாக வாக்கு கொடுத்து இரண்டரை லட்சம் பணமும் பெற்றுள்ளார்.

மூன்று நாட்களுக்கு முன்பு இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைப்பெற்றள்ளது.திருமணத்தில் சிறிதும் விருப்பமில்லாத சிறுமி அழுதுகொண்டே இருந்ததால் இதுப்பற்றி தெரிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முகமது சோமரை கைது செய்தனர்.மேலும் சிறுமியின் தந்தையையும், திருமணத்திற்கு காரணமான தரகரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version