தமிழகத்தில் பால் கொள்முதலை நிறுத்திவிட்டு வெளிமாநிலங்களில் இருந்து அதிக விலைக்கு வெண்ணை கொள்முதல் செய்வதை ஆவின் நிர்வாகம் நிறுத்தாவிட்டால் வரும் 17ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என பால் உற்பத்தியாளர் நல சங்கம் அறிவித்துள்ளது.சேலம் மாவட்டம் ஆத்தூரில் பால் உற்பத்தியாளர் நல சங்கம் மற்றும் ஆவின் பணியாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய பால் உற்பத்தியாளர் நல சங்க தலைவர் ராஜேந்திரன், தனியார் பால் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விற்பனை செய்யும் நிலையில், ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய தொகையை வழங்குவதில்லை என குற்றம்சாட்டினார். மேலும் தமிழகத்தில் பால் கொள்முதலை நிறுத்திவிட்டு வெளிமாநிலங்களில் இருந்து அதிக விலைக்கு வெண்ணை கொள்முதல் செய்வதை ஆவின் நிர்வாகம் நிறுத்தாவிட்டால் வரும் 17ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அவர் எச்சரித்தார்.
Discussion about this post