மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் சென்னையில் நடந்த மாரத்தான் போட்டியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
பெசன்ட் நகரில் உள்ள தனியார் பள்ளி அருகில் டிரீம் ரன்னர்ஸ் அமைப்பின் சார்பாக 21 கிலோ மீட்டர் தூரத்திற்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜன் கொடியசைத்து துவங்கி வைத்தார். ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்றதுடன் மட்டும் இல்லாமல் போட்டியில் பங்கேற்று ஓடினார். இதில், ஆயிரம் பெண்கள் உட்பட சுமார் 2 ஆயிரத்திற்கும் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த மாரத்தான் போட்டியின் மூலம் வரும் கிடைக்கும் நிதியானது உடல் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளவர்களுக்கு செயற்கை கை கால் உபகரணங்கள் வாங்க வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன், மாற்றுத்திறனாளிகள் என்றால் 60 சதவீதம் உடல் ஊனம் இருக்க வேண்டும் என்பதை 40 சதவீதமாக அரசு குறைத்துள்ளதாக தெரிவித்தார்.