கேரள எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் மாவோயிஸ்ட் ஒருவர் உயிரிழந்தார்.
கேரள எல்லைப் பகுதியான வயநாடு மாவட்டம் லக்கிடி பகுதியில், நேற்று இரவு 3 மாவோயிஸ்டுகள், அங்குள்ள தனியார் விடுதியில் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட்டு ஒருவர் உயிரிழந்தார். மாவோயிஸ்டு மற்றும் போலீசார் இடையே துப்பாக்கச்சூடு காரணமாக, தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் வனப் பகுதிகளில், போலீசார் ரோந்து பணிகளில் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post