பொருளாதார கொள்கையில் திருத்தம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்- மன்மோகன் சிங்

இந்தியாவின் பொருளாதார கொள்கையில் திருத்தம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை கருப்பு தினமாக ஆண்டுதோறும் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, இரண்டாவது ஆண்டு இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தீங்கு ஏற்படுத்தும் எண்ணத்துடன் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் ஏற்பட்ட துன்பங்கள் இன்றளவும் மக்களின் மனதிலிருந்து நீங்கவில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

வயது, பாலினம், மதம், இருப்பிட வித்தியாசங்கள் இல்லாமல் ஒவ்வொரு இந்தியரையும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை துயரத்தில் ஆழ்த்தியதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பின்னோக்கி செல்வதையும் ,கச்சா எண்ணெயின் விலை சர்வதேச அளவில் குறைந்துள்ள போதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வதையும் மன்மோகன் சிங் சுட்டிக் காட்டியுள்ளார்.

Exit mobile version