கர்த்தார்பூர் வழித்தடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்ததையடுத்து முதற்கட்டமாக 500 பேர் பாகிஸ்தானுக்குச் சென்று வழிபாடு நடத்திவிட்டுத் திரும்பி வந்தனர்.
பஞ்சாபின் குருதாஸ்பூர் தேரா பாபா நானக்கில் இருந்து பாகிஸ்தானின் கர்த்தார்பூர் சாகிப் குருத்துவாராவுக்குச் செல்வதற்குப் புதிதாக வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தையும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து முதற்கட்டமாகக் கர்த்தார்பூருக்குச் சென்ற சீக்கியப் புனிதப் பயணிகளை வழியனுப்பி வைத்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர், நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்ட 500 பேரும் கர்த்தார்பூர் சாகிப்பில் வழிபாடு நடத்திவிட்டுப் பாதுகாப்பாக மீண்டும் குருதாஸ்பூருக்குத் திரும்பிவந்தனர். அப்போது பேசிய அவர்கள் கர்த்தார்பூர் வழித்தடம் ஏற்படுத்திய இந்தியப் பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.