2003ல் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கோரிய காங்கிரஸ்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் காங்கிரஸ் கட்சியானது, கடந்த 2003 ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தில் ‘குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் வேண்டும்’ என்று கேட்டுள்ளது. இதுபற்றி அன்றைய காங்கிரஸ் தலைவர் மன்மோகன்சிங் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்தே, காங்கிரஸ் கட்சி அதனை எதிர்த்து வருகிறது. ஆனால் இதே காங்கிரஸ் கட்சி, முன்னர் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று கோரியும் உள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டில் பாஜக ஆட்சியின் போது, காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த மன்மோகன் சிங், நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கோரி பேசி உள்ளார். அந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அதில், அகதிகள் நடத்தப்படும் விதம் பற்றி நான் பேச விரும்புகிறேன். நம்முடைய நாடு பிரிக்கப்பட்ட பின்னர், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளில், சிறுபான்மை மக்கள் துன்புறுத்தல்களைச் சந்திக்கின்றனர். வேறு வழியில்லாத நிலையில், நமது நாட்டுக்குள் தஞ்சம் புகுகின்றனர். இந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதில் நாம் தாராள மனதுடன் நடந்து கொள்ள வேண்டும். இது நமது தார்மிகக் கடமை. எதிர்காலத்தில், குடியுரிமைச் சட்டம் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது, துணைப் பிரதமர் இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்” என்று மன்மோகன்சிங் பேசி உள்ளார்.

2003ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அப்படிப் பேசிய மன்மோகன் சிங்கும், பிற காங்கிரஸ் கட்சியினரும் தற்போது அந்த சட்டத் திருத்தம் அமலாகும் போது, அதையே அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கின்றனர். மன்மோகன் சிங்கின் இந்தப் பேச்சு இந்திய மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. சமூக வலைத்தளங்களில் பலரும் காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடத்தைக் கண்டித்து வருகின்றனர்.

Exit mobile version