தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே விநாயகர் சிலையை கரைக்கச் சென்றபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
ஐயர்கொட்டாயை சேர்ந்த விஜயகுமார் என்பவர், தனது நண்பர்களுடன் விநாயகர் சிலையை கரைக்க, தும்பலஹள்ளி அணைக்கு சென்றுள்ளார். அப்போது, அணையிலிருந்து உபரிநீர் செல்லும் வழியில் உள்ள தரைபாலத்தில் விநாயகர் சிலையை கரைக்க முயன்றார்.
அப்போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட விஜயகுமார், மரச்செடியை பிடித்தவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு குழுவினர் ஆற்றில் இறங்கி கயிறு கட்டி விஜயகுமாரை பத்திரமாக மீட்டனர்.