தமிழகத்தில் 25,000 விநாயகர் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு

தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் விநாயகர் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 890 இடங்களில் பிரம்மாண்ட வடிவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்தனர். சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 642 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்தனர். இதனையடுத்து விநாயகர் சிலைகள் அனைத்தும் குறிப்பிட்ட நாளில் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.

சென்னையை பொருத்தவரை வருகின்ற 5, 7 மற்றும் 8ம் தேதிகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு எண்ணூர், திருவொற்றியூர், பெரியார் நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், பட்டினப்பாக்கம், நீலாங்கரை ஆகிய 6 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து சிலைகளை கரைக்கும் வரை எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்கு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version