விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் செய்யும் பணி தீவிரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகள் செய்யும் பணி தமிழகமெங்கும் தீவிரமடைந்துள்ளது. வந்தவாசியில் விதவிதமான விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இங்கு ஐந்துமுக விநாயகர், விஷ்ணு விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 3 அடி முதல் 15 அடி வரையிலும் செய்யப்படும் இந்த சிலைகள், ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி தற்போது தண்ணீரில் எளிதாக கரையும் வகையிலும் தண்ணீர் மாசுபடாமலும் இருக்க பேப்பர் கூழ் கொண்டு சிலைகள் செய்யப்பட்டு வருகிறது.

Exit mobile version