திருமங்கலம், கப்பலூர் சுங்கச்சாவடியில் ஏற்பட்ட தகராறில் ஓட்டுநர் ஒருவர் ஊழியர்களைத் தாக்கிவிட்டுத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில், திருச்சியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் தனது நண்பர்கள் 6 பேருடன் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்துள்ளார். இந்நிலையில் வாகனம் பணம் செலுத்தும் இடத்தை அடைந்த போது, நீண்ட நேரம் காத்திருந்ததால், பணம் செலுத்தாமல், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஊழியர்களைத் தாக்கிவிட்டு, மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கிகளைக் கொண்டு நான்கு முறை வானத்தை நோக்கிச் சுட்டு விட்டுத் தப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில், காவல் துறையினர் விரைந்து எடுத்த நடவடிக்கையால், ஒரு மணி நேரத்திற்குள்ளாக சசிகுமார் மற்றும் நண்பர்களை அடுத்த டோல் கேட்டில் வைத்து மடக்கிப் பிடித்தனர். இச்சம்பவத்தில் தாக்கப்பட்ட 4 ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் கப்பலூர் சுங்கச்சாவடியில் திருமங்கலம் வட்டாட்சியர், காவல்துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
Discussion about this post