சென்னை அம்பத்தூரில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தனது உறவினரையே கூலிப்படை மூலம் கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் காமராஜபுரம் 5வது தெரு உள்ள பகுதியில் பாலாஜி பினிஷிங் என்ற ஆட்டோ மொபைல் சாதனங்கள் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் ராஜசேகர் இவருடைய கூட்டாளி பெயர் செந்தில்குமார். இருவரும் உறவினர்கள் கூட்டாக ஆட்டோ மொபைல் உதிரிபாக தொழில் செய்து வருகின்றனர். ராஜசேகருக்கும் அவரது கூட்டாளி செந்தில் குமாருக்கும் சமீபகாலமாக தொழிலில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நஷ்ட கணக்கை சரிக்கட்ட செந்தில்குமார் கூலிப்படை வைத்து தந்து கூட்டாளியான ராஜசேகரை கடத்தினார். அவரை கடத்தி செங்குன்றம் பகுதியில் உள்ள 400 அடி சாலையில் வைத்து ATM ல் இருந்து 100,000 ரூபாய் தொகையை எடுக்கசொல்லி மிரட்டியுள்ளனர். பின் ராஜசேகர் சகோதரர் சரவணனையும் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அப்போது தான் அண்ணன் ராஜசேகர் கடத்தப்பட்டதை அறிந்த தம்பி சரவணன் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தீவிரமாக விசாரித்த ஆய்வாளர் விஜயராகவன் செல்போன் என்னை வைத்து ஆய்வு செய்தனர். இதை அறிந்த கடத்தல்காரர்கள் ராஜசேகரை திருநின்றவூர் மேம்பாலம் அருகே விட்டு விட்டு தப்பி சென்றனர். இதை அடுத்து அம்பத்தூர் அருகே நடந்த வாகன சோதனையில் ராஜசேகரை கடத்திய கடத்தல் கும்பல் சிக்கியது. சிக்கியவர்களில் செந்தில்குமார், முனியப்பன், சகாதேவன், செந்தில்குமார், மணிகண்டன், பாண்டியன் ஆகியோரை நேற்று கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Discussion about this post