மேற்கு வங்க மாநில ஆளுநரை இன்றிரவு சந்தித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.
290 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் இரண்டு தொகுதிகளை தவிர 288 இடங்களுக்கு நடந்த தேர்தலில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையான 146 இடங்களை தாண்டி 213 தொகுதிகளை வென்றதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது.
அதே நேரம், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மம்தா பானர்ஜி, வேறு ஒரு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், இன்றிரவு 7 மணிக்கு ஆளுநர் ஜகதீப் தங்கரை மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். கடந்த முறை ஆட்சியில் அமைச்சர்கள் சிலர் பாஜகவுக்கு தாவியதால், தற்போது அமையவுள்ள புதிய அமைச்சரவையில் கட்சியில் நம்பிக்கைக்குரிய நபர்களுக்கும், இளம் தலைமுறையினருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
Discussion about this post