பா.ஜ.க.வின் வளர்ச்சியை பார்த்து, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பயம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் தாகூர் நகரில் பாஜக பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கிராமங்கள், விவசாயிகளை மம்தா அரசு புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டினார். விவசாயிகள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், இடைக்கால பட்ஜெட் வெறும் ஆரம்பம் தான் என்றும், மக்களவை தேர்தலுக்கு பின் தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட்டில், இளைஞர்கள், விவசாயிகள் சமூகத்தின் மற்ற பிரிவினருக்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
பா.ஜ.க.வின் வளர்ச்சியை பார்த்து முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பயம் ஏற்பட்டுள்ளதாக விமர்சித்த அவர், மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக மேற்கு வங்கத்தில் வன்முறையை தூண்டி விடுவதாகவும் குற்றம்சாட்டினார்.