நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள வனப்பகுதிகளில் வண்ண நிறங்களில் வலம் வரும் மலபார் அணில்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் அடர்ந்த வனப்பகுதிகளில் வசித்து வரும் ராதுஃபா இண்டிகா எனப்படும் அரிய வகை மலபார் அணில்கள் வசித்து வருகின்றன. சாதாரண அணில்களை விட உருவ அளவில் பெரியதாக காணப்படும் இந்த அணில்கள் அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டுமே வசித்து வருகின்றன. தற்போது நீலகிரி வனப்பகுதியை ஒட்டியுள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் சாலையோரங்களில் உள்ள மரங்களில் இத்தகைய மலபார் அணில்கள் வலம் வருவதால், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
Discussion about this post