அமெரிக்காவில் டிரம்ப்பின் எதிர்ப்பாளர்கள் ஜோசப் பைடன், ராபர்ட் டி நிரோவிற்கும் மர்ம பார்சல்

ஒபாமா, ஹிலாரி கிளிண்டனை தொடர்ந்து முன்னாள் துணை அதிபர் ஜோசப் பைடன், பிரபல நடிகர் ராபர்ட் டி நிரோவிற்கும் வெடி குண்டு பார்சல் அனுப்பப்பட்டுள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட ஜனநாயகக் கட்சியினர் மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் எதிர்ப்பாளர்கள் 7 பேர் வீடுகளுக்கு அனுப்பப்பட்ட வெடி குண்டு பார்சல் கைப்பற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை அதிபர் ஜோசப் பைடன் முகவரிக்கும் அதேபோல், பிரபல நடிகர் ராபர்ட் டி நிரோவின் உணவு விடுதிக்கும் மர்ம பார்சல் வந்துள்ளது. அதுவும் ஏற்கெனவே அனுப்பப்பட்ட வெடிகுண்டு பார்சலைப் போலவே இருந்ததால், நிபுணர்களின் உதவியுடன் சிறப்பு பாதுகாப்பு வாகனம் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

இதனால் டிரம்ப்பின் எதிர்ப்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு பார்சல்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மர்ம பார்சல் கண்டறியப்பட்ட உணவு விடுதி அருகே போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version