சமண சமயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஜைன மதத்துறவி மகாவீரர் ஜெயந்தி விழா இன்று உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இறைச்சிக்கடைகளும், மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.
நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் என மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் போதனையை போதித்தவர் மகாவீரர். இவர் கிமு 500 ஆம் ஆண்டில், தற்போது பீகார் மாநிலம் வைசாலிக்கு அருகே உள்ள குண்ட கிராமா என்ற இடத்தில் பிறந்தாக நம்பப்படுகிறது. அரண்மனை வாழ்க்கையைத் துறந்த மகாவீரர், தனது 43வது வயதில் ரிஜூபலிகா ஆற்றங்கரையில் சாலா மரத்தடியில் மெஞ்ஞானம் பெற்றார். அன்பையும், மனித நேயத்தையும் அகிம்சையையும் போதிக்கும் உன்னதமான கோட்பாடுகளைக் கொண்டது தான் மகாவீரரின் போதனைகள் ஆகும். இந்நிலையில், மகாவீரர் அவதரித்த தினமான இன்று, மகாவீர் ஜெயந்தி விழாவாக நாடு முழுவதும் சமணர்களால் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், குதிரைகள், யானைகள், தேர்கள், உட்பட பெரிய ஊர்வலங்கள் நடத்தப்படுவது வழக்கம். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறைச்சிக்கடைகளும், மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.