மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.
மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 21ந் தேதி நடைபெற்றது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் 60.83 சதவீத வாக்குகள் பதிவாகின. இதே போல், 90 தொகுதிகளை கொண்ட ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் 68.47% வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் இவ்விரு மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையின் நிலவரம் காலை 9 மணி முதல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகள் நடத்திய தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்பில், இருமாநிலங்களிலும் பாஜக அதிக இடங்களை வென்று ஆட்சியை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post