இல்லத்தரசிகளை ஏமாற்றி உடான்ஸ் விட்ட உடன்பிறப்புகளின் முதல்வர்!

சென்னையில நடந்த திருமண நிகழ்வு ஒன்றில்  கலந்துகொண்ட  முதலமைச்சர் ஸ்டாலின் மேடையில்  பேசும்போது, தமிழகத்தில்  ஒரு கோடி பெண்களுக்கு செப்டம்பர்15ஆம் தேதியில் இருந்து உரிமைத் தொகை வழங்குவோம் என்று பேசியுள்ளார்.

உடான்ஸ் விடும் முதல்வர்..!

தேர்தல் வாக்குறுதிய நிறைவேத்திட்டோம் என்கிற பெயரில்  இதையும் சொல்லியிருக்காங்க. ஆனா தேர்தல் வாக்குறுதியப்போ, அனைத்து பெண்களுக்கும் உரிமைத் தொகை மாதம் ஆயிரம் தர்றதா சொன்னாங்க.. அந்த கணக்குப்படி பார்த்தா தமிழகத்துல மொத்தம் 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. அப்படின்னா 2 கோடிக்கும் அதிகமான இல்லத்தரசிகள், பெண்கள் இருக்காங்க. இப்ப திடீர்னு ஒரு கோடி பேருக்குத்தான் உரிமைத் தொகை தருவேன்னு சொல்றது எல்லாம், எந்த வகையில நியாயம்…

ஏற்கனவே கூட்டுறவு வங்கியில 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்றோம்னு தேர்தல்ல வாக்குறுதி அறிவிச்சதோட எல்லோரையும் போய் நகைய அடமானம் வைங்கன்னுல்லாம் சொன்னாங்க…ஆனா ஆட்சியில உக்காந்ததும் அதெல்லாம் உடான்ஸாப் போயி இன்னைக்கு திமுக சொன்ன நம்புனதால நிறைய பேரு கடனாளியாகி ஆகியிருக்காங்க… இப்ப ஒரு கோடிக்கும் அதிகமானவங்களுக்கு உரிமைத் தொகை கிடையாதுங்குறமாதிரி சொல்லியிருக்காங்க. ஆக மொத்தத்துல உங்கள நம்பி ஓட்டுபோட்ட இல்லத்தரசிங்கள ஏமாத்தியிருக்கீங்கன்னு நாங்க சொல்லல…. ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.

Exit mobile version