மதுரையில் காளவாசல் மேம்பாலப் பணிகள் தீவிரம்: போக்குவரத்து மாற்றம்

மதுரையில் முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய, காளவாசல் மேம்பால பணிகள் மும்முரமாக நடைபெறுவதால், போக்குவரத்தில் இன்று முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை காளவாசல் மேம்பாலப் பணிகள் காரணமாக இன்று முதல் வரும் 30 ஆம் தேதி வரை அனைத்து வகை வாகனங்களும் குறிப்பிட்ட வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, காளவாசலிருந்து குரு தியேட்டர் வழி செல்லக்கூடிய இலகுரக மற்றும் கனரக வாகனங்களின் வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்றும், குரு தியேட்டர் சந்திப்பிலிருந்து காளவாசல் நோக்கி செல்லும், வாகனங்கள் அவ்வழியாக செல்ல அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், குரு தியேட்டர் சந்திப்பிலிருந்து காளவாசல் நோக்கி செல்லும் வாகனங்கள் மேற்குபுற மாற்று சாலையில் சிக்னலை அடையலாம் என்றும், காளவாசலிலிருந்து குரு தியேட்டர் நோக்கி செல்லக்கூடிய இலகுரக வாகனங்கள், ஞானஒளிபுரம் வழியாக சென்று DD சாலை வழியாக திரும்பவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கனரக வாகனங்கள் காளவாசலிலிருந்து, கரிமேடு காவல்நிலையம் வழியாக ஆரப்பாளையம் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும் என்றும், பெரியார் பேருந்து நிலையம் முதல் குரு தியேட்டர் வரை செல்லக்கூடிய இலகுரக வாகனங்கள் DD சாலை வழியாக செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் வாகன போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version