மதுரை திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழா !

திருமலை நாயக்கரின் 440 வது பிறந்தநாள் விழா,மதுரையில் உள்ள புகழ்பெற்ற திருமலை நாயக்கர் மஹாலில் விமரிசையாக நடைபெற்றது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு கலந்துக் கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, அதிமுக ஆட்சிக்காலத்தில் மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழா, அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக அமைச்சர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் அலட்சியப் படுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version