இராமேஸ்வரம் ரயில் நிலையம் மற்றும் பாம்பன் ரயில்வே தூக்குப் பாலத்தில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் மதுரை ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின், கோட்ட உதவி மேலாளர் ஒ.பி.ஷா மற்றும் மதுரை கோட்ட பாதுகாப்பு துறை கமாண்டோ ஜெகன்நாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேசிய கோட்ட மேலாளர் லெனின், ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் அடிப்படை வசதிகள் குறித்தும், விடுமுறை காலங்களில் சுற்றுலா தலங்களை இணைக்கக் கூடிய ரயில்கள் பயணிகள் தேவைக்கேற்ப இயக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில் நிலையம் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
Discussion about this post