அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டுமென மதுரை மாநகர காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் வெளியிட்ட அறிவிக்கையில் நாளை பொங்கலன்று நடைபெறும் ஜல்லிக்கட்டில், காளைகளை பிடிக்க தெரிந்த மற்றும் முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே பங்கெடுக்க வேண்டும் என்றும், பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்து மட்டுமே போட்டியை காண வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவனியாபுரத்தில் 2 அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதால், ஜல்லிக்கட்டை காண வருகை தருபவர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், ஜல்லிக்கட்டு வீரர்களுக்காக உரிய மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளதால், இப்போட்டி பாதுகாப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டுமென மதுரை மாநகர காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Discussion about this post