ஜி.எஸ்.டி. வரியை குறைத்து, மானியத்துடன் வங்கிக் கடன் வழங்க வேண்டும் என மதுரை ஜெயந்திபுரம் சிறு வியாபாரிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜெயந்திபுரத்தில் சுமார் நூற்றுக்கணக்கான சிறு தொழில்கள் நடைபெற்று வருகின்றன. கடலை மிட்டாயை முதல் இரும்பு பொருள் வரை அனைத்து பொருள்களும் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இத்தொழில்களை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.
இந்நிலையில் அதிக ஜி.எஸ்.டியால் சில நிறுவனங்கள் மூடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர்கள் தெரிவிக்கின்றனர். எனவே ஜி.எஸ்.டி வரியை மேலும் குறைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.