ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை கொட்டிய வழக்கில் வேதாந்தா நிறுவனத்திற்கு நோட்டீஸ்

மாசு ஏற்படுத்தும் வகையில் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை கொட்டிய வழக்கில் வேதாந்தா நிறுவனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

3.5 லட்சம் டன் ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளை பாதுகாப்பற்ற முறையில் உப்பாறு மற்றும் தனியார் பட்டா நிலத்தில் கொட்டியதாக புகார் எழுந்துள்ளது. எனவே, வேதாந்தா நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி நெல்லையை சேர்ந்த முத்துராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், மாசு ஏற்படுத்தும் வகையில் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை கொட்டிய வழக்கில் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றிய விவகாரத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோரும் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version