வாக்கு எண்ணும் மையங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் :மதுரை மாவட்ட ஆட்சியர்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த 27ஆம் தேதி முதல்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. முதல்கட்ட தேர்தலில் 76 புள்ளி 19 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 2 , 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 4,924 கிராம ஊராட்சி தலைவர்கள், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு டிசம்பர் 30 ம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது.315 மையங்களில் வாக்குகள் எண்ணப்படும் நிலையில் 30,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர்களின் முடிவுகள் இன்று மாலைக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளது. 200 வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிட தாமதமாகலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version