எய்ம்ஸ் மருத்துவமனையில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினரை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதில் பங்கேற்று உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினரை கெளரவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல் மாநிலமாகத் திகழ்கிறது என்றார். இதுவரை ஆயிரத்து 225 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளதாகவும், 7ஆயிரத்து 904 பேர் உடலுறுப்பு தானம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசின் பல்வேறு நலத்திட்டங்களில் உடல் உறுப்புதானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் விபத்தில் உயிரிழந்த கணவரின் உடலுறுப்புகளை தானம் செய்த பெண்ணுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது.
Discussion about this post